• Oct 26 2024

லோகேஷ் உடன் கெமிஸ்ட்ரி ஏற்பட்டதோ இல்லையோ? புளியங்கொம்பாய் பிடித்த ஸ்ருதிஹாசன் ..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடித்த ’இனிமேல்’ என்ற ஆல்பம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி இருவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி குறித்து தான் தற்போது இணையதளத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ’இனிமேல்’ ஆல்பத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக ஸ்ருதிஹாசனுக்கு புளியங்கொம்பு போல ஒரு மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

‘கேஜிஎஃப்’ நடிகர் யாஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்க இருக்கும் நிலையில் இந்த படம் ஒரு ரொமான்ஸ் படம் என்பதால் ஒரு ரொமான்ஸ் நாயகி தான் தேவை என்று கீத்து மோகன்தாஸ் தேடிக் கொண்டிருந்த போது தான் அவர் ’இனிமேல்’ ஆல்பத்தை பார்த்ததாகவும் அதில் ஸ்ருதிஹாசனின் நடிப்பு பிடித்து விட உடனே அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் இன்னொரு நாயகியாக கியாரா அத்வானி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 



வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே இருக்கும் ’இனிமேல்’ என்ற ஆல்பத்தின் காரணமாக ஸ்ருதிஹாசனுக்கு ஒரு புளியங்கொம்பு வாய்ப்பாக யாஷ் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதை பார்த்து திரையுலகினர் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்க இருப்பதாகவும் அவர் யாஷ் சகோதரியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

Advertisement