• Dec 26 2024

போடி என சொன்ன மீனா.. கன்னத்தில் ஓங்கி அடித்த விஜயா.. வைரல் வீடியோ..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!


சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் மீனா என்ற கேரக்டரில் கோமதி பிரியா நடித்து வரும் நிலையில் அவரது கேரக்டருக்கு மிகப்பெரிய அளவில் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் இந்த சீரியல் மிகக் குறைந்த காலத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நான் நடிகை கோமதிப்பிரியா அப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் விஜயா கேரக்டரில் நடித்த நடிகையுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் இருவரும் வாக்குவாதம் செய்வது போலவும் ஒரு கட்டத்தில் மீனாவை விஜயா ஓங்கி கன்னத்தில் அடிப்பது போன்ற காட்சியும் உள்ளது. இந்த க்யூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கோமதிப்பிரியா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோவுக்கும் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த சீரியலில் நடித்து வரும் ரோகிணி, ஸ்ருதி, சீதா கேரக்டரில் நடித்து வருபவர்களுடன் கோமதி அவ்வப்போது ரிலீஸ் வீடியோவை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்தது.



Advertisement

Advertisement