• Dec 26 2024

34 வயது ஆச்சு திரும்பி, காச தவிற எல்லாமே சம்பாதிச்சு இருக்கேன்.. ரசிகர்களை கண்கலங்க வச்ச பிரதீப்..

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். மீடியாக்களில் பிரபலமானவர்களை நபர்களை ஒரு வீட்டிட்குள் 100 நாட்கள் வைத்திருந்து அவர்களின் செயற்பாடுகளை ஒளிபரப்புவதே இந்த நிகழ்ச்சி ஆகும் 

இது நல்ல  வரவேற்புடன் 7 சீசன்களை கடந்திருந்தாலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 7 இன் மூலம் பலர் பிரபலமானார்களில் ஒருவரே பிரதீப் ஆண்டனி ஆவர் .

பிக்பாஸ் வீட்டில் இவரின் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி சக போட்டியாளர்களால்  ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு   வெளியேற்றப்பட்டார். 

இது திட்ட மிட்ட எவிக்சன் என சமூக வலைத்தளங்களில் பிரதீபுக்கு ஆதரவாக பல சினிமா பிரபலங்கள் , முந்தைய   சீசன்களில் கலந்து கொண்ட செலிபிரிட்டிகள் பேசி தங்களது கண்டனங்களை பதிவிட்டதை தொடர்ந்து பிரதீப் மிகவும் பிரபலமானார் 

இந்த நிலையில் தற்போது பிரதீப் ஆண்டனி தனது X  தள  பக்கத்தில் "34 வயது ஆச்சு திரும்பி பாத்தா  காச தவிற எல்லாமே சம்பாதிச்சு இருக்கேன் எதுமே இல்லடா போதும் எனக்கு நல்ல சாப்பாடு போட்டு, படிக்க வெச்சு, இன்னும் என் ஃபேஷனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கும்  என் நண்பர்களுக்கும் குடும்பத்துக்கும் எவ்வளவு  நன்றி சொன்னாலும் பத்தாது " என பதிவிட்டது ரசிகர்களை உருக வைத்துள்ளது


Advertisement

Advertisement