• Dec 26 2024

’கங்குவா’ படத்தின் கதையை போட்டு உடைத்த பிரபல நிறுவனம்.. இந்த படமும் காப்பி தானா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

கங்குவாபடத்தின் கதையை பிரபல நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் போட்டு உடைத்த நிலையில் இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படத்தின் கதை போல இருக்கிறது என்றும் இந்த படமும் காப்பி தானா என்றும் ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் தான் வாங்கிய படங்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது தெரிவித்துவரும் நிலையில்கங்குவாபடத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையையும் இந்நிறுவனம் தான் வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த விளம்பரம் ஒன்றில்கங்குவாபடத்தின் ஒன்லைன் கதையை அமேசான் நிறுவனம் பதிவு செய்துள்ள நிலையில் அந்த கதையை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

அதாவது 1700 ஆம் ஆண்டு தொடங்கி 500 வருஷமாக முடிக்க முடியாத ஒரு விஷயத்தை 2023ஆம் ஆண்டு சூர்யா கேரக்டர் முடிப்பது தான் இந்த படத்தின் கதை என அமேசான் பிரைம் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது




இதே போன்ற ஒரு கதைதான் கடந்த 2022 ஆம் ஆண்டு நந்தமுரி கல்யாண்ராம் நடிப்பில் வெளியானபிம்பிசாராபடம் இருந்தது என்பதும் மாயாஜாலம் மற்றும் டைம் டிராவல் நிறைந்த இந்த படத்தின் கதையை தான் பட்டி டிங்கரிங் செய்துகங்குவாபடம் உருவாக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது

பிம்பிசாராபடத்தில் இருந்த அதே 500 ஆண்டு காலம் மற்றும் டைம் டிராவல் கதையம்சம்கங்குவாபடத்தில் இருப்பதை அடுத்து அந்த படத்தின் காப்பியா என்ற கேள்வியும் தற்போது எழுந்து வருகிறது

அமேசான் ப்ரைமுக்கு விளம்பரத்திற்காக ஒன்லைன் சுருக்கத்தை படக்குழுவினர் கொடுத்த நிலையில் அதை அப்படியே போட்டுடைத்து தங்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கி விட்டதாககங்குவாபடக்குழுவினர் தற்போது புலம்பி வருகின்றனர். ஏற்கனவே  கார்த்திக் நடித்தகாஷ்மோராபடத்தின் கதையும் கிட்டத்தட்ட இதுதான் என்றும் சில ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement