• Dec 26 2024

கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட மீனா.. ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் திடீர் திருப்பம்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா மற்றும் முத்து ஆகிய இருவரும் ரவி மற்றும் ஸ்ருதியிடம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் காட்சி சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் வெளியாகி உள்ளது.

ஸ்ருதியை கையெடுத்து கும்பிட்ட மீனா, ‘என் கணவர் செய்த தப்புக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், உங்கள் அப்பாவிடம் கூட வந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், தயவு செய்து வீட்டுக்கு வாருங்கள்’ என்று கூறுகிறார்.

அதற்கு ஸ்ருதி ’நான் ஏன் வரவில்லை என்பது உங்களுக்கு தெரியும் தானே’ என்று கூறிய போது ’உங்கள் அப்பா மீதும் தவறு உள்ளது, அவர் என்னை திருடி என்றார், என்னுடைய குடும்பத்தையே திருட்டு குடும்பம் என்று கூறினார், அதனால்தான் அந்த சண்டையே வந்தது என்று மீனா விளக்கம் அளிக்கிறார்.

அதேபோல் ரவியிடம் ’நீ வீட்டிற்கு வா என்று முத்து கூற, ‘நீ எப்படி என் மாமனாரை அடிக்கலாம், அது தவறு தானே என்று கூறுகிறார். அப்போது முத்து ’மீனாவையும் மீனா குடும்பத்தையும் தரக்குறைவாக பேசியவரை எப்படி அடிக்காமல் இருக்க முடியும் என கூற ’அவர் தவறாக பேசியிருந்தால் என்னிடம் சொல்லி இருக்கலாம், நானும் ஸ்ருதியும் கேட்டிருந்தால் அது வேறு மாதிரி இருந்திருக்கும், நீ வாயால் கூட பேசவில்லை, கையால் அடுத்திருக்கிறாய்’ என்று கூறுகிறார். இத்துடன் இந்த புரமோ முடிவுக்கு வந்தாலும் ஸ்ருதி மற்றும் ரவி மனம் மாறி மீண்டும் வீட்டுக்கு வருவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கர்ப்பம் என்று நாடகமாடி கொண்டிருக்கும் ரோகிணியின் பொய் எப்போது வெளிச்சத்துக்கு வரும் என்றும் பார்வையாளர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. குடும்பத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை தீர்க்க வேண்டும் என்பதில் மீனா உறுதியுடன் இருக்கும் நிலையில் இந்த முறையும் ஸ்ருதியை வீட்டுக்கு கொண்டு வர அவர்தான் தீவிர முயற்சி எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement