• Dec 27 2024

இனிதான் தரமான சம்பவம் காத்திருக்கு.. ‘செவ்வந்தி’ சீரியலில் எண்ட்ரியாகும் பிரபல நடிகை..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ‘செவ்வந்தி’ சீரியலில் தற்போது புதிதாக ஒரு பிரபல நடிகையை களம் இறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சன் டிவியில் தினமும் காலை 11 30 மணிக்கு ஒளிபரப்பாகி  வரும் ‘செவ்வந்தி’ சீரியலில் திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார் என்பதும் இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக சுமாராக போய்க் கொண்டிருந்த நிலையில் இந்த சீரியலை விறுவிறுப்பாக தற்போது புதிய நடிகர் நடிகைகளை களம் இறக்கி விறுவிறுப்பை அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே திவ்யா ஸ்ரீதர் மற்றும் மனோகர், கார்த்திக் ஆகியோர் பார்வையாளர்களை கவர்ந்து உள்ள நிலையில் புதிதாக இந்த சீரியலில் ’யாரடி நீ மோகினி’ புகழ் நட்சத்திராவை களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் தான் தரமான சம்பவம் காத்திருப்பதாக சன் டிவி தரப்பில் இருந்து கூறப்படுகிறது. 

திவ்யா ஸ்ரீதர் மற்றும் நட்சத்திரா ஆகியோர்களின் கேரக்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் கண்டிப்பாக பார்வையாளர்களுக்கு ஒரு மிகப் பெரிய விருந்தாக இந்த கேரக்டர்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பெண்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் ‘செவ்வந்தி’ சீரியல் விரைவில் நிறைவடையும் என்று கூறப்பட்ட நிலையில் தான் தற்போது இந்த சீரியலின் குழுவினர் விறுவிறுப்பான காட்சிகளை எடுத்து வருவதாகவும் கண்டிப்பாக இந்த சீரியல் டிஆர்பியில் நல்ல இடத்தை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement