• Dec 25 2024

மீனா எவ்வளவு அடக்கமான பொண்ணு.. தங்கச்சி சீதா இந்த ஆட்டம் போடுதே.. இதெல்லாம் நல்லதுக்கில்லை..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலின் வெற்றிக்கு காரணம் இதில் நடித்து வரும் ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருவது தான் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த சீரியலின் ஹீரோ ஹீரோயின் முத்து, மீனா கேரக்டர்களாக இருந்தாலும் அனைத்து கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்குனர் திரைக்கதை எழுதி வருகிறார் என்பதும் சின்ன கேரக்டராக இருந்தால் கூட அதாவது மீனாவின் தங்கை கேரக்டரான சீதா கேரக்டருக்கு கூட அவ்வப்போது முக்கியத்துவம் கொடுத்து வருவது இந்த சீரியலின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் மீனாவின் தங்கை சீதா கேரக்டரில் நடிக்கும் சங்கீதா அவ்வப்போது கதையின் முக்கியத்துவத்தில் வருகிறார் என்பதும் ஸ்ருதிக்கு கல்யாணம் செய்து வைத்ததிலிருந்து பல திருப்புமுனைகளுக்கு இவர்தான் காரணமாக இருந்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சங்கீதாவுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவர் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் சங்கீதா தனது இன்ஸ்டா பக்கத்தில் மொட்டை மாடியில் மாடர்ன் டிரஸ் அணிந்து செம ஆட்டம் போட்ட வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் ‘மீனா எவ்வளவு அடக்கமான பொண்ணு, ஆனா அவங்க தங்கை கேரக்டரில் நடிக்கும் நீங்கள் இந்த ஆட்டம் போடுறீங்களே’ என்று கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

ஆனால் ஒரு சிலர் செம டான்ஸ் ஆடுகிறீர்கள், இன்னும் இதே போல் நிறைய ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்யுங்கள் என்றும் ’அடேங்கப்பா வேற லெவல்’ ’சூப்பர் டான்ஸ்’ என்றும் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். மொத்தத்தில் இந்த டான்ஸ் வீடியோவை அவர் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகிய நிலையில் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement