• Dec 26 2024

பிச்சை எடுத்தவுடனே கிடைத்த பெரும் தொகை.. 14 லட்சமல்ல.. 27 லட்சம்.. மனோஜ்க்கு அதிர்ஷ்டம்..

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் எப்படியாவது கனடா வேலைக்கு சென்று விட வேண்டும் என்று 14 லட்சம் ரூபாயை புரட்ட மனோஜ் தீவிர முயற்சி செய்து வருகிறார் என்ற காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

தனது அம்மா விஜயாவிடம் வீட்டை அடமானம் வைத்து 14 லட்சம் வாங்கி கொடுங்கள் என்று மனோஜ் கேட்ட போது விஜயா பேய் ஆட்டம் ஆடி, முடியாது என்று திட்டி விரட்டி விடுகிறார். இதனை அடுத்து சோகமாக தனது பார்க் நண்பனிடம் இதைப் பற்றி கூற அவர் உடனே ஒரு சாமியாரிடம் அழைத்து செல்கிறார். சாமியாரும் நீ பிச்சை எடுத்தால் உனக்கு பணம் கிடைக்கும் என்று கூறியதை அடுத்து அவர் பிச்சை எடுக்கிறார் என்பது வரை இன்றைய எபிசோடு முடிந்து உள்ளது.

இந்த நிலையில் நாளைய எபிசோடில் பிச்சையெடுக்கும் மனோஜை மீனா மற்றும் முத்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் இருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக ஒரு சில மணி நேரங்கள் பிச்சை எடுத்ததற்கே மனோஜ்க்கு அதன் பிரதிபலன் கிடைத்துள்ளதாக தெரிகிறது.



ஆம் மனோஜிடமிருந்து 27 லட்ச ரூபாயை ஏமாற்றிவிட்டு கனடா சென்ற அவரது முன்னாள் காதலி ஜீவா, மீண்டும் இந்தியா திரும்பி வரவிருப்பதாகவும் அவரை தற்செயலாக பார்க்கும் மனோஜ் அவரிடம் இருந்து பணத்தை கேட்கும் காட்சிகள் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் மனோஜின் முன்னாள் காதலி ஜீவா கேரக்டரில் நடித்த அட்சயா பாரதி  காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் அவரை மனோஜ் சந்திக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ஏமாற்றி சென்ற காதலியிடம் இருந்து மனோஜுக்கு 27 லட்சம் கிடைக்குமா? அதிலிருந்து 14 லட்சம் ரூபாய் அவர் வேலைக்காக கட்டி கனடா செல்வாரா? என்பதை எல்லாம் வரும் வாரங்களில் உள்ள எபிசோடுகளில் பார்ப்போம்.

Advertisement

Advertisement