• Apr 17 2026

என்னுடன் நடிக்க கவின் மறுத்துவிட்டார், ஏனென்று தெரியவில்லை: நடிகர் சிவா

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நான் நடிக்க இருக்கும் படம் ஒன்றில் கவின் நடிக்க இருந்ததாகவும் ஆனால் அந்த படத்தில் நடிக்க கவின் மறுத்துவிட்டதாகவும் நடிகர் சிவா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் மிர்ச்சி சிவா பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பதும் அவரது நடிப்பில் உருவான ’சூது கவ்வும் 2’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சிவா நடித்த ’கலகலப்பு’ மற்றும் ’கலகலப்பு 2’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. 



சுந்தர் சி இயக்கத்தில்  ’கலகலப்பு’  2 பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ற நிலையில் மூன்றாம் பாகமும் உருவாகும் என்றும் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. 

இது குறித்து சிவா சமீபத்தில் கூறிய போது ’கலகலப்பு 3’ திரைப்படம் நிச்சயம் உருவாகும் என்றும் சுந்தர் சி அதை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் என்னுடன் கவின் நடிக்க இருந்தார் என்றும் ஆனால் என்ன காரணத்தினால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். 

சிவா நடிக்கும் ’கலகலப்பு 3’ படத்தில் கவின் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து கவின் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement