• Dec 25 2024

அயலான் இசை வெளியீட்டு விழாவில் செம சேட்டை செய்த சிவகார்த்திகேயனின் மகன்- வைரலாகும் வீடியோ- ரொம்ப கியூட்

stella / 11 months ago

Advertisement

Listen News!


கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான மாவீரன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

 தற்காலிகமாக 'எஸ்.கே 21' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

 படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக சிவகார்த்திகேயன் தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளார். 


இது ஒரு புறம் இருக்க இவரது நடிப்பில் உருவாகிய திரைப்படம் தான் அயலான். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார்.இப்படத்தின இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார் சிவா. அப்போது தனது மகன் குகன் தாஸ் உடன் சிவகார்த்திகேயன் ஒன்றாக அமர்ந்து இருந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இதனை அடுத்து தற்பொழுது குகன் சேட்டை செய்த வீடியோ வெளியாகி வைரலாகிவருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement