• Dec 26 2024

விரைவில் அவரே வந்து பேட்டி கொடுப்பார்- தன்னைப் பார்க்க வந்த குட்டி பத்மினியிடம் கனகா என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் பிரபலயமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கனகா. இவர் கரகாட்டக்காரன் என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ரஜினி,பிரபு என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

கடைசியாக அவர் தமிழில் விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்திருந்தார்.இதனை அடுத்து சினிமாவை விட்டு விலகிய இவர் தனிமையிலேயே வசித்து வருகின்றார்.இதனால் சினிமாத்துறையில் இருக்கும் யாரைம் சந்திக்காமல் இருந்து வருகின்றார்.அவரை அறிமுகப்படுத்திய கங்கை அமரன்கூட கனகா குறித்து அண்மையில் அளித்த பேட்டியில் உருக்கமாக பேசியிருந்தார். மேலும் அவரை தொடர்புகொள்ள முயன்றும் தோற்றுப்போனதாக அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் அண்மையில் நடிகை குட்டி பத்மினி அவரை சந்தித்திருந்தார்.அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாக பலரும் இவரா கனகா எனக் கேட்டு வந்தனர். இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்தது குறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கனகாவை பார்த்ததில் ரொம்பவே சந்தோஷம். வெளிநாட்டு டூருக்கு போய் வர சொல்லியிருக்கிறேன். 

அவரும் சந்தோஷமாக கேட்டுக்கொண்டார். புது வீடும் வாங்க சொல்லியிருக்கிறேன். என்னை அவர் அக்கா என்றே அழைக்கிறார்”, “கனகாவை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் காஃபி ஷாப்புக்கு சென்றேன். அங்கு பேசிக்கொண்டிருந்தபோது உன் ரசிகர்கள் எல்லாம் உன்னை நேரில் பார்க்க சொன்னார்கள். 

கனகாவுக்கு உதவி செய்யுங்கள் என்று சொன்னார்கள். அதனை சந்தோஷமாக கேட்ட அவர், ' ரியலி,நிஜமாவா’ என ஆச்சரியத்துடன் கேட்டார். அதுமட்டுமின்றி அவரிடம் நான், வெயிட்டை குறைக்க நடன பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தினேன். அவர் கூச்சப்பட்டார். மேலும் வீட்டுக்கு வா. பேட்டிகள் கொடு என்று சொன்னேன். அதற்கு அவர் கண்டிப்பாக கொடுக்குறேன் அக்கா என கூறியதாக பத்மினி அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.


Advertisement

Advertisement