• Dec 26 2024

சசிகுமாரை ஓவர்டேக் செய்த சூரி.. ‘கருடன்’ படத்தில் செய்த சம்பவம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த சூரி தற்போது சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்து வரும் படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

விடுதலைபடத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்ததை அடுத்து அவர் தற்போதுவிடுதலை 2’ ’கருடன்’ ’கொட்டுக்காளி’  உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக இருப்பதை அடுத்து சூரியின் மார்க்கெட் இன்னும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சூரி நடித்தகருடன்திரைப்படம் ரிலீஸ்-க்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சூரி மற்றும் சசிகுமார் இந்த படத்தில் நடித்திருக்கும் நிலையில் சசிகுமாரின் விசுவாசமான வேலைக்காரனாக இந்த படத்தில் சூரி நடித்திருப்பதாகவும் சசிகுமார் நடிப்பையே அவர் ஓவர்டேக் செய்யும் அளவுக்கு அவரது நடிப்பு இருந்ததாகவும் தன்னுடைய கேரக்டரை விட சூரியின் கேரக்டருக்கு முக்கியத்துவம் அதிகம் இருந்தாலும் பெருந்தன்மையோடு சசிகுமார் அதை ஏற்றுக்கொண்டு சூரிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

கருடன்திரைப்படம் ரிலீஸ் ஆனால் சூரியின் வேற லெவல் சம்பவம் குறித்து ரசிகர்களுக்கு தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ரோஷினி ஹரிப்பிரியன், சமுத்திரகனி, மைம் கோபி,  மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதி உள்ளார் என்பதும் ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement