• Dec 26 2024

சூரிக்கு செட்டில்மெண்ட் செய்த விஷ்ணு விஷால்.. திரைமறைவில் நடந்தது என்ன?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூரி மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் அப்பா இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாகவும் கோடிக்கணக்கில் நடந்த இந்த பிரச்சனை காரணமாக காவல் துறையில் புகார் கொடுத்ததாகவும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் சமீபத்தில் விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் சூரியிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டதாகவும் விரைவில் செய்தியாளர்களுக்கு இது குறித்த முழு விவரத்தை தெரிவிப்போம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சூரி மற்றும் விஷ்ணு விஷால் இடையில் ஆன செட்டில்மெண்ட் குறித்த தகவல் கசிந்து உள்ளது. நிலம் வாங்கி தருவதாக சூரியிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கிய விஷ்ணு விஷாலின் அப்பா தரவேண்டிய பணத்தை முழுவதுமாக தான் செட்டில் செய்து விடுவதாகவும் அதனால் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று சூரியிடம் விஷ்ணு விஷால் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.



இது குறித்து ஆரம்பத்தில் விஷ்ணு விஷால் தரப்பினர் சூரியிடம் அணுகி இதை கூறிய போது சூரியும் நீண்ட யோசனைக்கு பிறகு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. என்ன இருந்தாலும் விஷ்ணு விஷால் ஒரு காலத்தில் தனக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் என்பதும் சக நடிகர் என்பதால் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதே சரியானது என்றும் வழக்கு என்று வந்தால் வருட கணக்கில் அது நீண்டு கொண்டே செல்லும், தற்போது தனக்கு சேர வேண்டிய பணம் வருவதால் சமாதானமாக போய்விடலாம் என்று சூரியும் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகத்தான் சூரி மற்றும் விஷ்ணு விஷால் சந்திப்பு ரகசியமாக நடந்ததாகவும் இருவருக்கும் இடையே செட்டில்மெண்ட் முடிந்ததாகவும் விரைவில் சூரி, தான் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மீண்டும் விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து ஒரு படத்தில் நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மொத்தத்தில் சூரி மற்றும் விஷ்ணு விஷால் இடையிலான பிரச்சனை முடிவுக்கு வந்தது இரு தரப்பிற்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement