• Dec 26 2024

சீரியல் நடிகை ‘சவுண்டு’ சந்தியாவுக்கு திருமணம்.. மாப்பிள்ளை ’மெட்டி ஒலி’ நடிகரின் மகன்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி உள்பட பல டிவியில் உள்ள தொடர்களில் நடித்த சவுண்டு சந்தியாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் இவர் ’மெட்டி ஒலி’ சீரியலில் நடித்த நடிகையின் மகனை தான் திருமணம் செய்ய போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சவுண்டு சந்தியா ஆரம்பத்தில் ஆதித்யா டிவியில் ’காலேஜ் டாட் காம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு ’கண்மணி’ ’சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ ’நம்ம வீட்டு பொண்ணு’ போன்ற சீரியல்களை நடித்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சக்திவேல்’ என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சந்தியாவுக்கும் முரளி கிருஷ்ணன் என்பவருக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருப்பதாகவும் இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளதை அடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இவர் திருமணம் செய்ய போகும் முரளி கிருஷ்ணன், ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்த சாந்தியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி தற்போது ’சக்திவேல்’ தொடரில் சாந்தி மற்றும் சந்தியா ஆகிய இருவரும் மாமியார் மருமகளாக நடித்து வரும் நிலையில் விரைவில் நிஜ மாமியார் மருமகளாகவே ஆகப் போகின்றனர் என்பது ஆச்சரியமான தகவல் ஆகும்.

Advertisement

Advertisement