• Apr 15 2025

அமெரிக்க கலை நிகழ்ச்சியில் ஒலிக்கப்பட்ட தென்னிந்திய ஹிட் பாடல்! செம்ம ட்ரெண்டிங் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் நடிப்பில் அண்மையில் வெளியன் திரைப்படம் தான் குண்டூர் காரம்.

இந்த படம் எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ளதோடு, இதில் ஸ்ரீ லீலா, மீனாட்சி சாவ்திரி, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, ரம்யா கிருஷ்ணன் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

மகா சங்கராந்தி விழாவில் முன்னிட்டு கடந்த ஜனவரி 12ஆம் தேதி இந்த படம் வெளியாகி, உலக அளவில் 170 கோடிக்கும் அதிகமாக வசூலில் சாதனை படைத்திருந்தது.

இந்த படத்தில் இடம் பெற்ற 'குறிச்சி மடதாபெட்டி' என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதன் நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது வரையில் 10 கோடி   பார்வையாளர்களை கடந்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.


இந்த நிலையில், இந்தப் பாடல் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன்  நகரில் கூடைப்பந்து விளையாட்டின் போது மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளில் கவனம் பெற்றுள்ளது. 

அதாவது, குறித்த நடன நிகழ்ச்சியில் கலைஞர்கள்  'குறிச்சி மடதாபெட்டி' பாடலுக்கு நடனமாடியுள்ளார்கள். இது தொடர்பிலான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement