• Jan 10 2025

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து அரங்கேறும் திருமணங்கள்! சார்லி மகனுக்கும் பிரம்மாண்ட கொண்டாட்டம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வந்த நடிகர் சார்லி, குணச்சித்திர நடிகர் ஆகவும் அறியப்பட்டவர். இவர் அதிகமாக படித்திருந்தாலும் அரச உத்தியோகத்தையும் உதறித் தள்ளி நான் நடிகனாக தான் ஆவேன் என பிடிவாதமாக இருந்தார்.

1983 ஆண்டு பொய்க்கால் குதிரை திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். நகைச்சுவை நடிகராகவும் துணை நடிகராகவும் கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜயுடன் காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம் போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அண்மைக்காலமாகவே கதைக்கும் கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.


இந்த நிலையில், நடிகர் சார்லியின் மகன் அஜய்தங்கசாமி - பெர்மிசியாடெமி ஆகிய இருவருக்கும் நேற்றைய தினம் திருமண வரவேற்பு பிரம்மாண்டமாக நடந்துள்ளது.


இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளதோடு முதலமைச்சரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். தற்போது குறித்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement