• Dec 26 2024

கமல்ஹாசன் பார்ட்டியில் சட்டவிரோதமான பொருள்? சுசித்ரா பேட்டியால் போலீஸ் விசாரணை?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் அளிக்கும் பார்ட்டிகளில் சட்டவிரோதமான பொருள் பரிமாறப்படுவதாக சமீபத்தில் பாடகி சுசித்ரா அளித்த பேட்டியின் காரணமாக இது குறித்து கமல்ஹாசனிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இதனை அடுத்து கமல்ஹாசனிடம் போலீசார் இது குறித்து விசாரிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர் ஆன நாராயணன் திருப்பதி என்பவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர், நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடத்தும் கேளிக்கை விருந்துகளில் வெள்ளித் தாம்பாளத்தில் சட்டவிரோத பொருள் அளிக்கப்படுகிறது என்று சர்வ சாதாரணமாக கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் அவருடைய முன்னாள் கணவரும் அந்த பொருளை எடுத்து கொள்கிறார் என்றும் தமிழ் திரைப்பட உலகில் இந்த பொருள் என்பது சகஜமாக உள்ளது என்றும் கூறியிருப்பது தமிழகம் மற்றும் திரை உலகம் திசை மாறி செல்கிறது என்பதை உணர்த்துகிறது.  

ஒரு நேர்காணலில் பெண் போலீசார் குறித்து பேசியதற்கு பேட்டி அளித்தவரையும், பேட்டி எடுத்தவரையும் கைது செய்த தமிழக காவல்துறை, இந்த நேர்காணலில் சுசித்ரா போதை பொருள் குறித்து பேசிய விஷயங்களை அலட்சியப்படுத்தாமல் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவர் குறிப்பிட்டவைகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அவர் கூறியதில் அடிப்படை ஆதாரமிருந்தால், கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து சர்ச்சைக்குரிய பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் மிகச்சிறந்த நடிகரும், அரசியல் கட்சியின் தலைவருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேச முன்வர வேண்டும். சுசித்ரா கூறியதில் உண்மை இல்லையெனில், மறுப்பு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் மீது புகார் அளித்து வழக்கு தொடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement