சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியலில் முன்னணியில் நடித்து வருகின்ற ஹீரோயினிகளில் ஸ்ரிதிகாவும் ஒருவர். இவர் திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் என்ற தொடரின் மூலம் பிரபல்யமடைந்ததுடன் பல ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து வைதேகி , உறவுகள் சங்கமம் ,குல தெய்வம் மற்றும் கல்யாணப் பரிசு போன்ற நாடகங்களில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துக் கொண்டார். ஸ்ரிதிகா 2020 ம் ஆண்டு சீரியல் நடிகர் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் திருமணமாகி 4 வருடங்களை கடந்த நிலையில் இன்னும் அவர்களுக்கு எந்த குழந்தையும் இல்லாமல் இவ்வளவு காலமாக இருந்தனர். தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கின்ற வகையில் ஒரு போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர்.
அதில் அவர்கள் ஸ்ரிதிகா கர்ப்பமானதை உறுதிசெய்கின்ற வகையிலான போட்டோவையும் இணைத்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த செய்தி அவர்களுக்கு மட்டும் இல்லாது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்ற வகையில் அமைந்திருந்தது.
Listen News!