• Dec 27 2024

சுனைனா வருங்கால கணவருக்கு 2 குழந்தைகள் இருக்கிறதா? அதிர்ச்சி புகைப்படம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை சுனைனா துபாயை சேர்ந்த யூடியூபர் ஒருவரை திருமணம் செய்யப் போகிறார் என்றும் சமீபத்தில் அவருக்கு நிச்சயதார்த்தம் ஆனதாகவும் புகைப்படத்துடன் கூடிய செய்தி சற்று முன் வெளியாகிய நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின் படி சுனைனாவின் வருங்கால கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகைகளின் ஒருவரான சுனைனா சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் ஆனதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று தான் அவர் திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை காலில் அல் அமெரி என்று தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் ஆனதாகவும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.



இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புகைப்படத்துடன் கூடிய தகவல் படி சுனைனாவின் வருங்கால கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் காலில் அல் அமெரி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சுனைனாவை இரண்டாவது ஆக திருமணம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது.

அதனால்தான் சுனைனா தனது வருங்கால கணவர் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது அவரது வருங்கால கணவரின் தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement