• Dec 26 2024

எந்த ஒரு சாமியா இருந்தாலும், யாரு கும்பிடுற சாமியா இருந்தாலும், சாமி சாமி தான்.. ‘லால் சலாம்’ டிரைலர்

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் தொழில்நுட்ப காரணங்களால் 7 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்  7 மணிக்கும் வெளியாகாத நிலையில் கிட்டத்தட்ட 10 மணிக்கு தான்  டிரைலர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் டிரைலரில் அனல் பறக்கும் வசனங்கள் உள்ளன. அவை பின்வருவன்:

கடைசியில் நல்லா இருந்த ஊரை சுடுகாடு ஆக்கிட்டீங்களேடா. 

 உன் பையன் திரும்பி இந்த ஊரே திரும்பி பாக்குற மாதிரி வருவான், இது அந்த ஆத்தா மேல சத்தியம்.  

எப்ப குடிப்பான், எவனா அடிப்பாங்கிற பயத்திலேயே காலம் ஃபுல்லா என்னால வாழ முடியாது.  

இன்னும் ஆறு மாசத்துல எலக்சன் வரப்போவுது, அவங்க ஓட்டு எல்லாம் ரொம்ப முக்கியம். 

கூட்டம் சேக்கறதை விட யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ரொம்ப ஆபத்தானவன்,  இனிமேல் அவனை உயிரோடு விடக்கூடாது. 

 நான் கோட்டை மதிக்கலைன்னு யார் சொன்னா, உள்ள இருக்கிற சில ஆட்கள் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்கிறேன். 

பையன் சம்பாதிச்சா வீட்டுக்கு பெருமை, பையன் சாதிச்சா நாட்டுக்கு பெருமை, இவன் நாட்டுக்கே பெருமை தேடி கொடுப்பான். 

திருவிழா அன்னைக்கு மட்டும் தான் என் பையன், என் பேரப்பிள்ளை எல்லாரும் என் கூட இருப்பாங்க, நான் வருஷம் ஃபுல்லா வாழ்ற,து இந்த ரெண்டு நாளுக்காக தான்.

எந்த ஒரு சாமியா இருந்தாலும், யாரு கும்பிடுற சாமியா இருந்தாலும், சாமி சாமி தான்.

 ஊர்ல வெள்ள வேட்டி, வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு அல்லாஹு அக்பர்னு ஐந்து நேரம் நமாஸ் பண்ணிக்கிட்டு  சமாதானம் பேசிட்டு இருக்குறஆளுன்னு நினைச்சியா,  பம்பாய்ல பாய் ஆளே வேறடா. 

மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை, மனித நேயத்தை அதுக்கு மேல வை,  அதான் இந்த நாட்டோட அடையாளம்.  

போன்ற ஆனால் பறக்கும் வசனங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் சிறப்பு தோற்றமாக இருந்தாலும் ரஜினிகாந்த் மொய்தீன்பாய் என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது இந்த ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

மொத்தத்தில் இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் விக்ராந்த், விஷ்ணு விஷால், ஜீவிதா, செந்தில் உள்ளிட்டோர் நடிப்பை பார்க்கும் போது  இந்த படம் ஒரு முழுமையான திருப்திகரமான படமாக பார்வையாளர்களுக்கு இருக்கும் என்றும் தெரிய வருகிறது.



Advertisement

Advertisement