• Dec 27 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விசித்ராக்கு கணவன் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ் பார்ட்டி- வைரலாகும் வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இறுதிவாரத்தை எட்டி உள்ளது. இந்நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான பைனல் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியின் பைனலுக்கு மணிச்சந்திரா, விஷ்ணு விஜய், மாயா, அர்ச்சனா, தினேஷ், விஜய் வர்மா ஆகிய 6 போட்டியாளர்கள் தேர்வாகி உள்ளனர். 

இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார்கள். அது யார் என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும். இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சியிலிருந்து விசித்ரா வெளியேறினார்.ஏற்கனவே பூர்ணிமாவும் பணப்பெட்டி உடன் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது மாயா கேங் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


இந்த சீசனில் டாம் அண்ட் ஜெரி போல சண்டை போட்டுக்கொண்டிருந்த தினேஷ் மற்றும் விசித்ரா ஆகிய இருவரை நேற்றைய எபிசோடில் கமல் சமரசம் பேசி கைகொடுக்க வைத்தார். அதன்பின் தான் எலிமினேஷன் கார்டை காட்டி விசித்ராவை வெளியேற்றினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விசித்ராவுக்கு அவரது குடும்பத்தினர் சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement