• Dec 26 2024

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி இல்லை! என் அப்பா மனிதர்களை நேசிப்பவர்! ஆவேசமாக பேசிய ஐஸ்வர்யா

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில், ரஜினியும் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் என்றாலே  பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதுபோலவே, குறித்த இசை வெளியிட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினியும் விழாவில் கலந்துகொண்டிருக்கிறார்.


இந்த நிலையில், மேடையில் பேசிய ஐஸ்வர்யா ரஜினி, என் அப்பாவை சங்கி என சொல்லும்போது கோவம் வரும். இப்போ சொல்கிறேன், ரஜினிகாந்த் சங்கி கிடையாது என ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சமூக வலைதளத்தில் இருந்து எப்போதுமே விலகியே இருக்கிறேன். ஆனாலும், என்னுடைய டீம் அடிக்கடி ஒரு விஷயத்தை காட்டிக் கொண்டே இருந்தனர். அதிலும் குறிப்பாக சங்கி என முத்திரை குத்தப்படும் அந்த வார்த்தை எனது மனதை ரொம்பவே உருத்துகிறது. 


உங்களுக்கு எல்லாம் தெளிவா புரியும்படி ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி இல்லை. எங்கப்பா சங்கியா இருந்திருந்தா லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்திருக்கவே மாட்டார். 

மதங்களை கடந்து மனிதர்களை மட்டுமே நேசக்கூடிய மனிதர் அவர் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார். தற்போது இந்த விஷயம் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement