• Dec 27 2024

5 வருடத்தில் ஒரே படம் மட்டும் தியேட்டரில்.. கெஸ்ட் ரோலில் 3 படம்.. என்ன ஆச்சு சூர்யாவுக்கு?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த ஐந்து ஆண்டுகளில் சூர்யா நடித்த ஒரே ஒரு படம் மட்டுமே தியேட்டரில் வெளியாகி உள்ளது என்றும் அதுவும் தோல்வி படம் என்றும் அதன் பின்னர் மூன்று படங்களில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்றும் சூர்யாவை திரையரங்கில் ஒரு வெற்றி ஹீரோவாக பார்த்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சூர்யா நடித்த ’காப்பான்’ என்ற திரைப்படம் திரையரங்கில் வெளியானது. அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு ’சூரரைப் போன்று’ 2021 ஆம் ஆண்டு ’ஜெய் பீம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் தான் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

இதையடுத்து 2022 ஆம் ஆண்டு ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் வெளியான நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து கமல்ஹாசனின் ’விக்ரம்’ மாதவனின் ’ராக்கெட்டரி’ ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே சூர்யா நடித்த நிலையில் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ள ’சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படத்திலும் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

எனவே ’காப்பான்’ படத்திற்கு பிறகு ’எதற்கும் துணிந்தவன்’ என்ற ஒரே ஒரு படம் மட்டுமே திரையரங்குகளில் சூர்யாவுக்கு வெளியாகியுள்ள நிலையில் ’கங்குவா’ படமும் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து அறிவிப்பு இல்லாததால் சூர்யா ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் நீண்ட காத்திருப்புக்கு தீனி போடும் வகையில் ‘கங்குவா’ படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement