• Dec 26 2024

’கங்குவா’ பாட்டா? ஆடி மாத அம்மன் பாட்டா? ஃபயர் பாடலை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நேற்று சூர்யாவின் பிறந்தநாளை அடுத்து ’கங்குவா’ படத்தின் ஃபயர் பாடல் வெளியான நிலையில் இந்த பாடல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் நடுநிலை சினிமா ரசிகர்கள் இந்த பாடலை கேலியும் கிண்டலும் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சரியாக ஆடி மாதத்தில் இந்த பாடல் வெளியாகியுள்ளதை அடுத்து ஆடி மாத அம்மன் பாடல் போல் உள்ளது என்றும் ஏற்கனவே பல ராமநாராயணன் படங்களில் இதே போன்ற பாடல் வெளியாகியுள்ளது என்றும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

நெட்டிசன்கள் கிண்டல் செய்வதை போல தான் இந்த பாடலும் உள்ளது என்றும் ’நெருப்பை நெருப்பே’ என்று சொல்வது எல்லாம் அம்மன் அம்மன் என்று சொல்வது போல் இருக்கிறது என்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படம் குறித்து எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனங்களும் வந்துவிடக்கூடாது என்பதில் படக்குழுவினர் மிகவும் கவனமாக இருக்கும் நிலையில் முதல் பாடல் ரிலீசின் போதே ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்கள் வெளியானதை அடுத்து தயாரிப்பு தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து இந்த நெகட்டிவிட்டியை போக்குவதற்காக விரைவில் மேலும் ஒரு பாடலை வெளியிட இருப்பதாகவும் அந்த பாடல் மாஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்  ‘கங்குவா’ படத்தின் ப்ரமோஷன் பணி விரைவில் தொடங்க இருப்பதாகவும், தமிழ்நாடு, இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் தான் நடைபெற இருப்பதாகவும், குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன் உள்ளிட்ட நகரங்களுக்கு சூர்யா உட்பட படக்குழுவினர் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement