• Dec 26 2024

அக்காவை போல் தங்கையும் காதலில் விழுந்தாரா? ஆணழகனுடன் அர்ஜுன் இரண்டாவது மகள்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, நடிகர் உமாபதியை காதலித்த நிலையில் இந்த காதலர்கள் திருமணம் ஜூன் 10ஆம் தேதி நடந்தது என்பதும் பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் சகோதரி அதாவது அர்ஜுன் இரண்டாவது மகளும் தற்போது காதலில் விழுந்து உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா ஆகிய இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் ஐஸ்வர்யா திரையுலகில் கவனம் செலுத்திய நிலையில், அஞ்சனா  தொழிலதிபராக இருந்து வருகிறார். பழ தோளில் பேக் செய்யும் தொழில் செய்து வரும் நிலையில் அவரது வித்தியாசமான இந்த தொழில் நல்ல லாபத்துடன் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் அக்கா ஐஸ்வர்யாவுக்கு திருமணமானதை அடுத்து ரூட் கிளியர் ஆகிவிட்டதாக அஞ்சனா நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் திடீரென அவர் ஆணழகன் ஒருவருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதையடுத்து இருவரும் காதலிக்கிறார்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இருப்பினும் அஞ்சனா இதுவரை தனது காதல் குறித்து எந்த ஒரு பதிவையும் செய்யவில்லை என்பதும் அந்த செல்பி புகைப்படத்தில் இருக்கும் ஆணழகன் யார் என்பதையும் அவர் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் விரைவில் அஞ்சனா திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement