நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் நாளை கொண்டாட இருக்கும் நிலையில் இன்று நள்ளிரவே கொண்டாட்டம் ஆரம்பமாகும் வகையில் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது.
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் இம்மாத இறுதியில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நாளை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ’சூர்யா 44’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று நள்ளிரவு 12.12 மணிக்கு வெளியாகும் என்று கார்த்திக் சுப்புராஜ் சற்று முன் தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார். இந்த தகவல் அறிந்ததும் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஏற்கனவே சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ படத்தின் ஃபயர் சாங் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இன்று இரவு முதலே சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா, பூஜா ஹெக்டே, சுஜித் சங்கர், ஜெயராம் ,கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படம் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வருகிறது.
#Suriya44 #LetsMakeAWish pic.twitter.com/cc7IPUSSCW
— karthik subbaraj (@karthiksubbaraj) July 22, 2024
Let the flames of the ancients awaken your spirits ❤️
— Studio Green (@StudioGreen2) July 22, 2024
Get ready to experience the much-awaited #FireSong from #Kanguva 🔥
Releasing tomorrow at 11:00 AM 🌋 #KanguvaFromOct10 🦅 @Suriya_offl @DishPatani @thedeol @directorsiva @ThisIsDSP #StudioGreen @GnanavelrajaKe… pic.twitter.com/457FA4pLV6
Listen News!