• Dec 27 2024

கண்ட படத்தையும் எடுக்காம ஆயிரத்தில் ஒருவன் 2 ஐ எடுங்க! விளாசிய தயாரிப்பாளர்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், நடிகர்கள், பாடகர்கள் என போட்டி போட்டு பிரம்மாண்ட திரைப்படங்களையும் உருவாக்கி வெளியிட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் முன்னணி நட்சத்திரங்களை வைத்து திரைப்படங்களை இயக்கி மிகப்பெரிய லாபம் ஈட்டலாம் என்ற எண்ணத்தில், பல படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தன. ஆனாலும் அவற்றுள் ஒரு சிலவே ஹிட் கொடுக்க, இன்னும் சில ரசிகர்களின்  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியிருந்தன.

இவ்வாறான நிலையில் தற்போது உலக நாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியானது. இது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான போதும் விமர்சன ரீதியில் படுமோசமாக அடி வாங்கியது.

அதே சமயம் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளியான டீன்ஸ் திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த போதும் அதிகளவான வசூலை பெறாவிட்டாலும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.


இவ்வாறு இந்தியன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 28 வருடங்கள் கழித்து வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். அதேபோல இன்னும் சில படங்களின் இரண்டாம் பாகம் வெளியாவதற்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில், கண்ட கண்ட கதை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள். இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். தற்போது அவருடைய எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement