• Jan 20 2025

லப்பர் பந்து பட நடிகையை திருமணம் செய்த சன் டிவி நடிகர்! வைரலாகும் புகைப்படங்கள்!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

சன் டிவியின் ரஞ்சனி சீரியல் புகழ் சந்தோஷ் பிரபல நடிகை மௌனிகாவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திருமண பந்தத்தில் இணைந்துள்ள புதிய ஜோடியின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய, 'கன்னத்தில் முத்தமிட்டால்' சீரியலில் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் சந்தோஷ். இந்த சீரியலை தொடர்ந்து, 'அண்ணா' சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் கதாபாத்திரம், அண்ணா சீரியலில் நெகட்டிவ்வாக மாறியதால், அதிரடியாக இந்த சீரியலில் இருந்து விலகினார் சந்தோஷ். தற்போது சன் டிவியின் ரஞ்சனி சீரியலில் நடித்து வருகிறார்.


இதே சமயம் மௌனிகா பிளாக் ஷீப் வீடியோஸ், மற்றும் கனா காணும் காலங்கள் போன்றவற்றில் நடித்து பிரபலமானவர். சமீபத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண், ஸ்வாசிகா, போன்ற பலர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற, 'லப்பர் பந்து' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 


இந்நிலையில் சந்தோஷ் - மௌனிகாவின் திருமண நிச்சயதார்த்தம், கடந்த அக்டோபர் மாதம் நடந்த நிலையில், இதை தொடர்ந்து இவர்களின் திருமணம் கேரள முறைப்படி நடந்து முடிந்துள்ளது. திருமணம் எளிமையாக நடந்தாலும், ரிசப்ஷன் கிராண்டாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement