• Dec 26 2024

கமல்ஹாசனின் மிரட்டல் நடிப்பு.. ஷங்கரின் பிரமாண்டம்.. ரூ.1000 கோடி உறுதி.. ‘இந்தியன் 2’ டிரைலர்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ படம் வரும் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு நிமிடங்களுக்கும் மேலான ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆரம்பக் காட்சிகளே பிரமாண்டமாக இருக்கும் இந்த ட்ரைலரில் ஊழல், திருட்டு, லஞ்சம் ஆகிவிட்டால் மக்கள் வெறுப்படைகின்றனர். படிப்புக்கேற்ற வேலையில்லை, அரசியல்வாதிகளிடம் நேர்மை இல்லை என்ற புலம்பும் நிலையில் தான் இந்தியன் தாத்தா நாட்டை திருத்த மீண்டும் வருகிறார்.

அதன் பிறகு அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கை என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது. ’இது இரண்டாவது சுதந்திரப் போர், காந்திய வழியில் நீங்கள், நேதாஜி வழியில் நான்’ என்று தனது கடமையை ஆரம்பிக்கும் இந்தியன் தாத்தா அந்த கடமையை செவ்வனே முடித்தாரா என்பது தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் ’இந்தியன் 2’ திரைப்படம் எதிர்பார்த்ததை விட இரு மடங்கு அதிகமாக படமாக்கப்பட்டிருக்கும் என்றும் ஷங்கர் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் மிரட்டி இருப்பார் என்றும் டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது.

அனிருத்தின் பின்னணி இசை கமல்ஹாசனின் வெவ்வேறு கெட்டப், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், எஸ்ஜே சூர்யா ஆகியோர்களின் மிரட்டலான நடிப்பு ஆகியவை அனைத்தும் ஒரே படத்தில் இருப்பதை அடுத்து இந்த படம் சூப்பர் சக்சஸ் ஆகும் என்றும் ரூ.1000 கோடி வரை வசூலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement