• Dec 26 2024

அரபிக் குத்து பாடலுக்கு போட்டி போட்டாடிய தல, தளபதி! வேற லெவலில் வீடியோ

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை கலக்கும் இரு  நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் தான் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார். இவர்களுக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் காணப்படுகிறது. இவர்களுக்காகவே வாழ்ந்து வரும் ரசிகர்களும் உண்டு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தான் கோட். இந்த படத்தில் அண்மையில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜி மூலம் அதில் நடிக்க இருப்பதாக சுவாரஸ்ய தகவல் வெளியானது. இதனால் கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து உள்ளது.

அதேபோல அஜித் குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருவதோடு அடுத்து குட்பேட்அக்லி படத்திலும் நடிக்க உள்ளார். இது தொடர்பான அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.


இந்த நிலையில், விஜய் நடிப்பில் வெளியாகி கிட் அடித்த அரபிக் குத்துப் பாடலுக்கு அஜித் நடனம் ஆடுவது போல ஏஐ டெக்னாலஜி மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றது.


மேலும், எதிர்வரும் மே முதலாம் தேதி அஜித்குமார் தனது 53வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். சமீபத்தில் தனது மகளின் பிறந்த நாளையும் மகனது பிறந்தநாளையும் மற்றும் தனது திருமண நாளையும் படு ஜோராக அஜித் கொண்டாடிய நிலையில், தனது பிறந்த நாளையும் கோலாகலமாக கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, அஜித்தை விஜயுடன் அரபிக் குத்து பாடலுக்கு ஏஐ எடிட் மூலம் நடனமாட வைத்த காட்சிகள் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தி உள்ளது.


Advertisement

Advertisement