• Oct 26 2024

காசு கொடுத்து வாங்கப்பட்டதா தாதா சாகேப் பால்கே விருது? பால்கே பேரன் மீது அதிருப்தி..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதாகவும் ’ஜவான்’ படத்தில் சிறப்பாக நடித்த ஷாருக்கான் மற்றும் நயன்தாராவுக்கு சிறந்த நடிகர், நடிகை விருதும் இந்த படத்தை இயக்கிய அட்லிக்கு சிறப்பு விருதும் அதுமட்டுமின்றி சர்ச்சைக்குரிய திரைப்படமாக கருதப்பட்ட ’அனிமல்’ பட இயக்குனருக்கு சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

தாதா சாகேப் பால்கே விருது என்பது மத்திய அரசு கொடுக்கும் கௌரவமான விருது என்பதும், இந்த விருதை சிவாஜி  கணேசன் உட்பட பல திறமையான நடிகர்கள் பெற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட விருது தான் ஷாருக்கான், நயன்தாரா, அட்லி மற்றும் அனிமல் இயக்குனருக்கு கிடைத்ததாக பலர் எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த விருது, மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட விருது கிடையாது என்பதும் ஒரு தனியார் அமைப்பு கொடுத்துள்ளதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.



தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது என்ற விருதை தனியார் அமைப்பு ஒன்று கொடுத்து வருவதாகவும் இந்த விருதை தேர்வு செய்யும் குழுவில் உள்ளவர்களில் ஒருவர் தான் தாதா சாகேப் பால்கே பேரன் என்றும் தெரியவந்துள்ளது.

பொதுவாக தனியார் அமைப்புகள் காசு வாங்கிக் கொண்டு கௌரவத்திற்காக விருதுகள் வழங்குவதாக கூறப்படும் நிலையில் சுமாரான படம் மற்றும் மோசமான படத்திற்கெல்லாம் விருது வழங்கியுள்ளதை பார்க்கும்போது இந்த விருதும் காசு கொடுத்து வாங்கப்பட்டதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 
அதுமட்டுமின்றி மத்திய அரசு கொடுக்கும் கௌரவமான ஒரு விருதின் பெயரில் ஒரு தனியார் அமைப்பு விருது கொடுக்க எப்படி அனுமதிக்கலாம் என்றும் இது பார்வையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாதா? மத்திய அரசு கொடுத்த தாதா சாகேப் பால்கே விருதைதான் நயன்தாரா வாங்கி இருப்பார் என்ற எண்ணம் ஏற்படுத்தாதா? என்பதையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் பால்கே பேரன் மீதும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

எனவே தாதா சாகேப் பால்கே என்ற பெயரில் விருதை மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இதே பெயரில் தனியார் அமைப்புகள் விருது வழங்க தடை செய்ய வேண்டும் என்ற குரல் ஒலித்து கொண்டிருப்பதால் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Advertisement