• Dec 26 2024

20 லட்ச ரூபாயை வேண்டாம் என்று சொன்னவர் த்ரிஷா.. அவரா 25 லட்சத்திற்கு விலை போயிருப்பார்: பிரபல இயக்குனர்

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷா கூவத்தூருக்கு வரவழைக்கப்பட்டதாகவும் அதற்காக அவருக்கு 25 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்த நிலையில் அதன் பிறகு அந்தர் பல்டி அடுத்த ஏவி ராஜு தான் அப்படி சொல்லவே இல்லை என்று கூறியதோடு மன்னிப்பும் கேட்டிருந்தார்.

இந்த விவகாரம் திரை உலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏவி ராஜு மன்னிப்பு கேட்டாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு அதன் பிறகு மன்னிப்பு கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி வருகின்றனர். இந்த விஷயத்தை த்ரிஷாவே மறந்துவிட்டு ’தக்ஃலை’ படப்பிடிப்புக்கு சென்றுவிட்டாலும் திரை உலகினர் சிலர் இன்னும் கொந்தளித்துக் கொண்டு தான் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் த்ரிஷா நடித்த ’தி ரோடு’ என்ற படத்தை இயக்கிய அருண் வசீகரன் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’த்ரிஷாவுக்கு 20 லட்ச ரூபாய் சம்பளம் அதிகம் கொடுக்க தயாரிப்பாளர் முன் வந்த போது அதை வேண்டாம் என்று மறுத்தவர் என்றும், அவரா 25 லட்ச ரூபாய்க்கு ஆசைப்பட்டு போயிருப்பார் என்றும் அவர் மீது அபாண்டமான பழியை சுமத்துகிறார்கள் என்றும் கூறினார்.

‘தி ரோடு’ படத்திற்காக த்ரிஷாவிடம் 50 நாட்கள் கால்ஷீட் பெறப்பட்டது என்றும் அதற்காக அவருக்கு 75 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகவும் ஆனால் குறிப்பிட்ட நாட்களில் படத்தை முடிக்க முடியாததால் 10 முதல் 15 நாட்கள் திரிஷாவிடம் அதிகமாக கால்ஷீஎ பெறப்பட்டதாகவும் அவரும் சம்பளம் பற்றி எதுவும் பேசாமல் நடித்து கொடுத்ததாக கூறிய அருள் வசீகரன், படப்பிடிப்பு முடிந்ததும் கூடுதலாக நடித்த நாட்களுக்காக த்ரிஷாவுக்கு தயாரிப்பாளர் 20 லட்சம் ரூபாய் கொடுக்க முன்வந்த போது அதை வேண்டாம் என்று த்ரிஷா மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

தான் நடித்ததற்கே பணம் வாங்க விரும்பாத த்ரிஷாவா 25 லட்ச ரூபாய்க்காக ஒரு கேவலமான விஷயத்தை செய்திருப்பார் என்பதை யோசிக்க வேண்டாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement

Advertisement