• Dec 26 2024

விஜய் டிவி புகழின் மகளா இது! இவ்வளோ அழகா இருக்காங்களே! பிறந்தநாள் போட்டோ பகிர்ந்த புகழ்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பிடித்த பிரபலமாக மாறியவர் தான் புகழ். அடித்தட்டு மட்டத்தில் இருந்து நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக எவ்வளவோ சோதனைகளை கடந்த புகழ், தற்போது வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.



சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற ஒரு சிலர் மட்டும்தான் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த வரிசையில் தற்போது புகழும் இணைந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு தன்னுடைய காதலியான பென்ஸி ரியா என்பரைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தையும் பிறந்திருந்தது. தன்னுடைய மகளுக்கு ரித்தன்யா என்றும் பெயர் வைத்துள்ளார்.



இந்நிலையில் புகழின் மகள் ரித்தனியாவின் பிறந்தநாளை முன்னிட்டு தனது இன்ஸராகிறேம் பக்கத்தில் தனது மகளின் அழகிய புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார் இந்த பதிவுக்கு கீழே "என் வாழ்வை மாற்றிய பொக்கிஷம் நீ. நீ வந்த நாளில் இருந்து எங்கள் வாழ்க்கை வசந்தமாய் மாறியது.



முதன் முதலாக உன்னை என் கைகளில் ஏந்தியதை என்னால் மறக்கவே முடியாது. இனி வரும் காலம் முழுவதும் எங்கள் வாழ்வை கருவறையாக்கி உன்னை சுமக்கப்போகிறோம். மகளாய் வந்துள்ள மகாராணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படம்... 

Advertisement

Advertisement