• Jul 07 2025

பாக்கியா வீட்ட வந்து நாடகமாடும் சுதாகர்! இனியாவால் கதிகலங்கி நின்ற குடும்பம்; டுடே எபிசொட்

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா கோபியைப் பார்த்து இந்த கல்யாணத்தால பெரிய நஷ்டம் அம்மாவுக்கு தான் என்கிறார். மேலும் எனக்காக அம்மா அவங்களோட பிஸ்னஸையே இழந்திருக்காங்க என்று சொல்லி கவலைப்படுறார். அதைக் கேட்ட பாக்கியா அதெல்லாம் பெரிய விஷயமே இல்ல நானே அதை மறந்திட்டன் என்கிறார். பின் இனியா கோபியை பார்த்து எப்புடியாவது அவங்க கிட்ட இருந்து அம்மாவோட ரெஸ்டாரெண்டை திரும்ப வாங்கணும் என்கிறார்.


அந்த நேரம் பார்த்து சுதாகர் அங்க வந்து நிக்கிறார். அதைப் பார்த்தவுடனே பாக்கியா இனியாவை உள்ள போக சொல்லுறார். மேலும் இனியா கிட்ட எதுவுமே பேசவேண்டாம் எது பேசுறதா இருந்தாலும் என்கிட்ட பேசுங்க என்கிறார். அதுக்கு சுதாகர் நீங்க எல்லாம் கோபத்தில இருப்பிங்க என்று தெரியும் ஆனா இப்புடி நடக்கும் என்று நாங்களும் எதிர்பார்க்கல என்கிறார். 

அதைக் கேட்ட செழியன் என்ன எதிர்பார்க்கல என்று கோபமாக கேட்கிறார். இதனை அடுத்து கோபி இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இந்த பொய்யை சொல்லிட்டு இருக்கப்போறீங்க என்கிறார். பின் சுதாகர் இனியாவை கூட்டிட்டு போக தான் வந்தனான் என்கிறார். அதுக்கு பாக்கியா உங்க வீட்டுக்கு இனியா வருவாள் என்று கனவில கூட நினைக்க வேணாம் என்று சொல்லுறார். 


இதனை அடுத்து பாக்கியா செல்வியைப் பார்த்து வீட்டில எல்லாரும் இனியாவை நினைத்து பரிதவிச்சுப் போய் இருக்கிறாங்க என்று சொல்லுறார். பின் செல்வியும் கேவலம் ஒரு ரெஸ்டாரெண்டுக்காக இனியாவோட வாழ்க்கையையே இல்லாமல் செய்திட்டாரே..! அந்த சுதாகரை சும்மா விடக்கூடாது என்கிறார். இதனை தொடர்ந்து ஆகாஷ் தன்னால தான் எல்லாப் பிரச்சனையும் என்று சொல்லி அழுகுறார். பின் நிதீஷ் இனியாவை பார்க்க officeக்குப் போய் நிற்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement