• Dec 26 2024

லியோ படத்தில் நடித்த நடிகரின் குடும்பத்திற்கு கோர விபத்து! சம்பவ இடத்திலையே பலியான துயரம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் பிரபல நடிகராக காணப்படுபவர் தான் நடிகர் மேத்யூ தாமஸ்.இவர் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் விஜய்க்கு மகனாக நடித்து இருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறாராம்.


இந்த நிலையில், மேத்யூ தாமஸ் குடும்பத்தினர் தமது குடும்ப விழா ஒன்றுக்காக கொச்சி சென்ற நிலையில், அங்கு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் மேத்யூ தாமஸீன் உறவினரான பீனா டேனியல் என்பவர் உயிரிழந்து உள்ளார்.


ஆனாலும் மேத்யூ தாமஸின் அம்மா, அப்பா, அண்ணா பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனராம். தற்போது அவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


Advertisement

Advertisement