• Jan 11 2025

ப்ளூ சட்டை மாறனையே பங்கமாக கலாய்த்த பிரபல இயக்குனர்! இந்த அசிங்கம் தேவையா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல சினிமா விமர்சகராக காணப்படுபவர் தான் ப்ளூ சட்டை மாறன். இவர் படங்களை பார்த்துவிட்டு கொடுக்கும் விமர்சனங்களுக்கு பலர் ரசிகர்களாக உள்ளார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினிகாந்த் தொடக்கம் விஷால், விஜய் ஆண்டனி என தமிழ் சினிமாவில் வெளியாகும் ஒரு படங்களையும் விட்டு வைக்க மாட்டார். அது பற்றிய குறை நிறைகளை தெளிவாக சொல்லுவார்.

தான் காசு கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தனக்கு விமர்சனம் சொல்வதற்குரிய உரிமை உண்டு என விவாதம் பண்ணும் இவர், வழங்கும் பாசிட்டிவ் நெகட்டிவ் கமெண்ட்களை வைத்து சிலர் படம் பார்க்க செல்கிறார்கள்.

சில இயக்குனர்கள் இவர் மீது காவல் நிலையத்தில் புகார் கூட கொடுத்துள்ளார்கள். ஒருவரை விடாமல் கிண்டல் அடிப்பது டிவிட்டரில் சினிமா தொடர்பான செய்திகளை பதிவிடுவதோடு அதிலும் நக்கல் அடிப்பது தான் இவரது தொழில். தனுஷ், சிவகார்த்திகேயன் என ஒருவரையும் விட மாட்டார்.


குறிப்பாக ரஜினியை தலீவர் எனக் குறிப்பிட்டு தொடர்ந்து கிண்டல் அடிப்பார். சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனியையும் விட்டு வைக்கவில்லை அதேபோல இயக்குனர் சேரணையும் வம்பு இழுத்து உள்ளார்.

இந்த நிலையில் தனது twitter பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை சேரன் இயக்கலாம் என தகவல் பிரபல நடிகர் உடன் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது என்று டுவிட் போட்டிருந்தார்.

தற்போது இந்த 'தகவலுக்கு நன்றி மாறன்' என சேரன் பதில் அளித்துள்ளார். ஆகவே சேரனுக்கே தெரியாத விஷயத்தை மாறன் சொல்லி இருக்கின்றார் சேரன் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் என ப்ளூ சட்டை மாறனை எல்லாரும் கலாய்த்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement