• Jan 11 2025

எஸ்ஜே சூர்யாவுக்கு மட்டும் இத்தனை கோடி செலவு செய்தாரா சங்கர்? ஷாக் நியூஸ்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2 திரைப்படம். இந்த திரைப்படத்தை உலக நாயகன் கமலஹாசன் நடிக்க பிரபல இயக்குனரான ஷங்கர் இதனை இயக்கியிருந்தார்.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக பல தடைகள் ஏற்பட்டு  இழுபட்டு வந்த இந்த திரைப்படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி உலக அளவில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு 500 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகின்றது.

இந்த திரைப்படத்தில் உலக நாயகன் கமலஹாசன் உடன் சித்தார்த், சமுத்திரகனி, ப்ரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். இதன் காரணமாகவே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக காணப்பட்டது.


ஆனாலும் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. இதன் காரணத்தினால் இந்தியன் தாத்தாவை நெட்டிசன்கள் கதற விட்டிருந்தார்கள். இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியான போதும் அதில் இடம்பெற்ற குறைகளை சுட்டிக்காட்டி காட்சிகளையும் இணையத்தில் வைரல் ஆக்கியிருந்தார்கள்.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்திற்காக செட் போடுவதற்கு இயக்குனர் சங்கர் மிக அதிகமாக செலவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது எஸ்ஜே சூர்யா அளித்த பேட்டி ஒன்றில், இந்தியன் 2 படம் பற்றி முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதில் படத்தில் காட்டப்பட்ட எஸ்ஜே சூர்யாவின் வீடு செட் போட மட்டும் எட்டு கோடி ரூபாயை சங்கர் செலவு செய்துள்ளாராம். இந்த தகவல் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement