• Jan 11 2025

அடுத்தடுத்து வெளியான விடாமுயற்சி படத்தின் போஸ்டர்கள்! யார் யாருடையது தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறையவடைய உள்ளதாக படக் குழு தெரிவித்து இருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாகவே தடைப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் முதல் மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த படம் தொடர்பிலான அடுத்தடுத்த அப்டேட்டுக்களை படக் குழுவினர் வெளியிட்டு வருகின்றார்கள். அதன்படி அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்டவர்களின் போஸ்டர்களை அதிரடியாக வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்கள்.

அசர்பைஜானில் இந்த படத்தில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட கால சூழ்நிலைகளால் தடைபட்டது. ஆனாலும் கடந்த மாதத்தில் இருந்து மீண்டும் இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில், விடா முயற்சி படத்தில் நடிக்கும் இரண்டு நடிகர்களின் போஸ்டர்களை லைக்கா நிறுவனம் தம்முடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி தசரதி மற்றும் கணேஷ் சரவணன் ஆகிய இருவரின் போஸ்டர்களையும் தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விடாமுயற்சி திரைப்படம் அக்டோபர் அல்லது நவம்பர் ஆரம்பத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகின்றது. இந்தப் படத்தின் டப்பிங் உள்ளிட்ட 80% வேலைகள் நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டிலேயே அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகத்தில் உள்ளார்கள்.


Advertisement

Advertisement