• Dec 26 2024

அப்துல் கலாம் கைகளால் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற பிரபல பாடகர் மறைவு! பலரும் அஞ்சலி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

ஹிந்தி திரை உலகில் பல்வேறு பாடல்களை பாடி மக்களை கவர்ந்த மிகச் சிறந்த பாடகர் தான் பங்கஜ் உதாஸ்.

1970 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மற்றும் நடிகை ஹேமா மாலினி நடிப்பில் வெளியான படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் பாலிவுட்டில்  பல நூறு பாடல்களை பாடியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு வரை அவர் திரையிசை மற்றும் கசல் கச்சேரிகளை அரங்கேற்றி வந்துள்ளார்.


மேலும் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் கைகளால் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற பங்கஜ் உதாஸ், 46 ஆண்டு கால இசை பயணத்தில் பல நூறு விருதுகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில காலமாகவே உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பங்கஜ் உதாஸ்,   இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை அவரது மகள் உறுதிப்படுத்தி உள்ளார். தற்போது இவரின் மறைவுக்கு பல்வேறு  பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Advertisement

Advertisement