• Jun 13 2025

குபேரா படக்குழுவிற்கு அமேசான் விடுத்த எச்சரிக்கை...! அதிர்ச்சியில் படக்குழு...!

Roshika / 23 hours ago

Advertisement

Listen News!

சேகர் கம்முலா இயக்கத்தில் திரைக்கு வெளிவரவுள்ள திரைப்படம் குபேரா. இந்த திரைப்படத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ளனர். இத்திரைபப்படம் ஜூன் 20 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிப்பு விடுக்கபட்டுள்ளது . இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.


அமிகோஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சுனில் நரங் மற்றும் புஸ்கூர் ராம்மோகன் ராவ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தினை தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது . இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப்,  தலிப் தஹில்  ஆகியோர்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள்ளனர். இந்தப் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில்  நடைபெற்று இருந்தது . இந்த விழாவிற்கு  பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.  


தற்போது இந்த திரைப்படம் குறித்து  தகவல்  வெளியாகி உள்ளது.  இந்த திரைப்படம் மூன்று முறை ரீலிஸ் திகதி மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 20ஆம் திகதி  உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த படம் 3.15 மணி நேரமாக உள்ள படியால் இயக்குநர் நேரத்தை குறைக்க முயன்றுள்ளார். இதனை  அமேசான் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது  .மேலும் 47 கோடிக்கு வாங்கிய அமேசான் இன்னும் தாமதமானால் 10 கோடி குறைப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள படியால்  முழு நேரத்துடன் வெளியிடப்படுகின்றது. இத் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் 














Advertisement

Advertisement