• Dec 26 2024

சூரி தாடி வைக்காம நடிச்சிருக்கலாம்.. படத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தமில்ல! கருடனை விமர்சித்த பயில்வான்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியான கருடன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படம் தொடர்பில் பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்துள்ளார்.

இந்த படத்தில் அனாதையாக இருப்பவர் தான் சூரி. அவரை 10 வயசில் தத்தெடுத்து சோறு போட்டு வளர்க்கிறவர் தான் உன்னி முகுந்தன். அதனால அவருக்காக உயிரையேக் கொடுக்கிற ஒரு விசுவாசியாக மாறுகிறார் சூரி. உன்னி முகுந்தனுக்கு நெருங்கிய நண்பர் சசிகுமார். அந்த ஊரில் உள்ள கோவிலுக்கு பல கோடி மதிப்பில் சொத்து இருக்கு. அந்த சொத்தை ஆட்டைய  போடுவதற்கு அமைச்சர் ஆர்.வி உதயகுமார் திட்டம் போடுகிறார். அதற்கு மைம்கோபிக்கிட்ட சொல்லி எடுத்து வர சொல்றார்.

உன்னி முகுந்தனின் மனைவிக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்று ஆசை வரும். அதனால தன் கணவருக்கு தூபம் போட அவரும் அதற்கேற்றாப்போல் ஆடுகிறார். அதனால் அந்த சொத்தை எப்படியாவது ஆர்வி உதயகுமார் இடம் கொடுக்க வேண்டும் என்று போராடுகிறார். மறுப்பக்கம் அந்த சொத்தை கோயிலுக்கே கொடுக்க வேண்டும் என்று சசிகுமார் போராடுகிறார். இதுல சூரியோட பங்கு என்ன என்பதுதான் கதை.


முதல் 15 நிமிடத்தில் சமுத்திரக்கனி வருகிறார். இன்ஸ்பெக்டராக இருக்கும் அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க, அதற்கான காரணத்தை எழுதிக் கொடுக்கிறார். அது சஸ்பென்ஸ் ஆக இருக்கும். படம் முழுவதும் சசிகுமார் தான் ஹீரோவாக இருக்கிறார். இடைவெளிக்கு பிறகு தான் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் சூரி ரொம்ப உருகி போய் நடித்துள்ளார். எஜமானின் விசுவாசத்தை நன்றியுள்ள நாய் பேசினா எப்படி இருக்குமோ அப்படி நடித்திருக்கிறார். வில்லனாக வரும் உன்னி முகுந்தனும் மலையாள வாடை இல்லாமல் பேசி உள்ளார்.

எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க. சசிக்குமாரின் மனைவியை மிக அழகாக நடித்துள்ளார். சூரியை டான்ஸ் ஆட வைக்கல ஆனால் யுவனின் இசை தாலாட்ட வைத்துள்ளது. ஒளிப்பதிவும்  பளிச்சென்று இருக்கு. இந்த படத்தில் இயக்குனர் பல திருப்பங்களை அழகாக எடுத்துக்காட்டி உள்ளார்.

கருடன் பெருமாள் கோவிலில் பறக்கும். ஆனால் அம்மன் கோவில் கடைசியாக பறக்க விட்டிருப்பாங்க. இந்த படத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்ல. நவரசத்தையும் காட்டிய சூரி தாடி வைக்காமல் இருந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement