• Apr 24 2026

ஆமா.. நான் ரொம்ப ரொம்ப கெட்டவள்.. வைரலாகும் பிக் பாஸ் புகழ் ரம்யா ஜோவின் இன்ஸ்ரா பதிவு

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  தற்போது பிக் பாஸ் வீட்டில் 12 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர்.  இறுதியாக ரம்யா ஜோ, வியானா ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தனர்.

அதில் சின்ன வயதில் பெற்றோர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் தனது சகோதரிகளுடன் வளர்ந்தவர் தான் ரம்யா ஜோ. இவருக்கு ஸ்டெல்லா என்ற மற்றொரு பெயரும் உண்டு.

தங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நிலையை சமாளிக்க ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் நடனம் ஆட ஆரம்பித்தார்.  மேலும் தனக்கு திரைப்பட கலைஞராக வேண்டும் என்பது ஆசை எனவும் கூறினார்.


பிக் பாஸ் 9 சீசனில் பல போட்டியாளர்கள் தங்களை புரொமோட் செய்யும் வகை  பேசினர். ஆனால் ரம்யா ஜோ, நான் சின்ன வயசில் இருந்தே தனியாக வளர்ந்தவள். குடும்பத்துடன் உட்கார்ந்து சேர்ந்து சாப்பிட்டது இல்லை. இந்த பிக் பாஸ் செல்ல முக்கிய காரணம் கொஞ்ச  நபர்களுடன் ஒன்றாக இருந்து சாப்பிட வேண்டும் என்று தான் எனக்கு கூறினார் இது பலரையும் கவர்ந்தது.

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரம்யாவை பல ஊடகங்களும் பேட்டி எடுத்து வருகின்றன. அதில் பல கருத்துக்களை ரம்யா தெரிவித்து வருகின்றார். மேலும் கானா வினோத் அவரை தவறாக தொடுதல் செய்தார் என்ற விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில், ரம்யா ஜோ  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  யாரும் என்ன பற்றி ஜட்ஜ் பண்ண வேண்டாம்.  உங்களுக்கு நான் கெட்டவள் அப்படி என்று தோணுச்சு என்றால், நான் ரொம்ப ரொம்ப கெட்டவள். என் வீட்டில் இருக்கிறவங்களுக்கும் என்ன புடிச்சவங்களுக்கும் நான் யாருன்னு ரொம்ப நல்லா தெரியும். அதனால நான் இதைபற்றி யோசிக்க போறது இல்ல என்று பதிவிட்டு உள்ளார்.


Advertisement

Advertisement