• Dec 26 2024

Bigg Boss- ல வந்து நான் பண்ண முதல் phone call... மனம் திறந்த பூர்ணிமா

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் வைக்கப்பட்ட பணப்பெட்டியை 16 லட்சங்களுடன் எடுத்துக் கொண்டு வெளியேறியவர் தான் பூர்ணிமா ரவி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே இவர் சினிமாத் துறை மீது கொண்ட ஆர்வத்தினால் சிறிய வீடியோக்கள், போட்டோ சூட் என ஆரம்பித்து நாளடைவில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது காமெடி வீடியோக்களை வெளியிட்டு மிகவும் பிரபலமானார்.

இதை தொடர்ந்து அண்மையில் நயன்தாராவுடன் இணைத்து நடித்த அன்னப்பூரணி படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.


இந்த நிலையில், அவர் நடிப்பில் வெளியான செவப்பி திரைப்படம் குறித்து வழங்கிய பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் செவப்பி பட ப்ரோமோஷன் பற்றி கோல் பண்ணி பேசி இருந்தன். அது தான் நான் வெளில வந்து எடுத்த 1ஸ்ட் கோல்.


மேலும், நான் இதுவரையில் யூடியூபில் போட்ட வீடியோக்கள் குய்ட் பண்ணியத்திற்கு காரணம் அடுத்த ஸ்டேப்க்கு போவதற்கு தான் என செவப்பி படம் தொடர்பில் பேசியுள்ளார் பூர்ணிமா.

அத்துடன், இன்னும் 2,3 படங்களில் நடக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement