• Dec 26 2024

சல்மான் கானை தீர்த்துக்கட்ட 25 லட்சம் பேரம்..! தென்னிந்திய சினிமாவில் பரபரப்பு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்பவர் தான் நடிகர் சல்மான்கான். இந்த நிலையில் சல்மான் கானை கொலை செய்ய முயற்சித்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதாவது சுகா என்ற நபரை ஹரியானாவின் பானிபட்டில் வைத்து நேற்றைய தினம் கைது செய்துள்ளார்கள். அவர் மும்பைக்கு அழைத்து வரப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

சல்மான் கானின் பண்ணை வீட்டுக்கு செல்லும் வழியில் அவரை கொலை செய்வதற்காக கடந்த ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட சதி முறையடிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம்  பந்த்ராவில் உள்ள  சல்மான் கானின் வீட்டுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

இதை தொடர்ந்து ஹரியானாவைச் சேர்ந்த பிரபல ரவுடி  கும்பல் ஒன்று தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்யும் முயற்சியில் தனது வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே சல்மான் கான் போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.


மேலும் கடந்த ஜனவரி மாதம் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் போலி அடையாளங்களை பயன்படுத்தி தனது பண்ணை வீட்டில் அத்து மீறி நுழைந்ததாகவும் சல்மான் கான் தெரிவித்து இருந்தார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது மும்பை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையின் ஒரு பகுதியாகவே சல்மான்கானின் இந்த வாக்குமூலம் இடம்பெற்று உள்ளது.

குறித்த ரவுடி கும்பல் சல்மான்கானை கொலை செய்யும்  நோக்கத்துடன் அவரின் பந்த்ரா இல்லம் பண்ணை வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் அவரை கண்காணிப்பதற்காகவே 60 தொடக்கம் 70 பேரை களம் இறக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த கும்பலுக்கு 25 லட்சத்துக்கு ஒப்பந்தம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement