• Dec 25 2024

பிரம்மாண்டமாக நடந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் பர்த்டே பங்சன்! குவிந்த பிரபலங்கள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.

ஆண் ஆதிக்கம் உள்ள வீட்டில் வாழும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் எப்படியான துன்பங்களை சந்திக்கின்றார்கள் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் நம்பர் 1 இடத்தில் இருந்த நிலையில், மாரிமுத்து மறைவுக்கு பின் சற்று TRPல் தட்டுத்தடுமாறியது.


மாரிமுத்து நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக தற்போது வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இவருடைய நடிப்பு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும், எதிர்நீச்சல் சீரியலில் தற்போது தர்சினி கடத்தப்பட்டு தற்போது அவர் தப்பித்த நிலையில், தர்சினியை தேடி போன பெண் சிங்கங்கள் அங்கு சிக்கவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், எதிர்நீச்சல் தொடரில் அவ்வப்போது வந்துபோகும் கதாபாத்திரத்தில் நடிக்கும் வைஷ்ணவி தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement