• Apr 08 2025

"ஐ" பட ஹீரோயினி அம்மா ஆகிட்டாங்களா...? இன்ஸ்டாவில் வெளியான லேட்டஸ்ட் போட்டோஷூட்!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை எமி ஜாக்சன் மற்றும் பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது குறித்து ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் முழங்குகின்றன. இத்தம்பதியினர் தங்கள் மகிழ்வான செய்தியை இனிமையான புகைப்படங்களோடு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

நடிகை எமி ஜாக்சன் இந்திய திரையுலகில் மதராசப்பட்டினம் , ஐ போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தவர். மேலும் திரையுலகில் தனித்துவமான நடிப்பு மற்றும் அழகு என்பவற்றைக் கொண்ட நடிகையாக எமி ஜாக்சன் விளங்கினார்.


எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் சேர்ந்து தங்களது புதிய மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த பல திரைப்பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.


இருவரும் பல ஆண்டுகளாக காதலித்திருந்தனர். இவர்களின் உறவு, 2022ல் அதிகாரப்பூர்வமாக வெளிவந்த நிலையில் 2025ல் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தற்பொழுது தங்களுடைய குழந்தையின் புகைப்படத்தினை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அத்துடன் அக்குழந்தைக்கு ஆஸ்கர் அலெக்சாண்டர் என்ற பெயரினையும் வைத்துள்ளனர்.


Advertisement

Advertisement