சீசன் 8 முடிந்ததும் போட்டியாளர்கள் மிகவும் பிசியாகியுள்ளனர்.நிகழ்வுகள், நேர்காணல்கள் போன்றவற்றில் வெளியில் வந்ததும் கலக்கிவரும் போட்டியாளர்களிற்கு பட வாய்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளது. தற்போது மீடியா ஒன்றில் சவுந்தர்யா வழங்கியுள்ள நேர்காணல் வைரலாகி வருகின்றது.
இந்த நேர்காணலினை fatman ரவீந்திரன் செய்துள்ளார்.சவுந்தர்யாவிடம் சரளமாக ஏகப்பட்ட கேள்விகளை குதர்க்கமாக கேட்டாலும் சவுந்தர்யா எதுவித தயக்கமும் இன்றி பதிலளித்துள்ளார். ஆரம்பத்திலே freeze டாஸ்க்கில் விஷ்ணுவிற்கு சவுந்தர்யா propose பண்ணது மற்றும் வீட்டுக்கு போனதும் அம்மா அப்பா reaction குறித்து கேட்க அவர் அதற்கு " எல்லாருமே இத தான் கேக்கிறாங்க நீங்க எல்லாரும் expect பண்றத பாத்தா எங்க அம்மாவும் அப்பாவும் என்ன கும்மி கும்மி அடிச்சமாதிரி இருக்கே அப்புடி எல்லாம் இல்லை ;எல்லாம் super proud" என வேடிக்கையாக கூறியுள்ளார்.
மற்றும் பெட்டி எடுக்காமல் வந்தது உன்னோட பிளான் தானே என பாட்மன் கேட்க " சாத்தியமா இல்லைங்க நான் எடுத்திட்டு திரும்பலாம்னு தான் நினைச்சன் ஆனா பெட்டி எனக்கு ரொம்ப தூரமா இருந்திச்சு ஆன உங்களுக்கு edit மூலம் கிட்ட இருந்தது போல காட்டி இருந்தாங்க நியமாவே அது ரொம்ப தூரம்; அது என்னை நம்பி நானே ஏமாந்த moment " என கூறியுள்ளார்.
Listen News!