தனுஷ் நடிப்பில் இறுதியாக அவருடைய ஐம்பதாவது படம் ராயன் வெளியாகி இருந்தது. இது கலவையான விமர்சனத்தை பெற்ற போதும் வசூல் ரீதியாக 100 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருந்தது. தற்போது குபேரா படத்தில் நடித்து வரும் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய படங்களையும் இயக்கி வருகின்றார்.
துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமான தனுஷ் இதுவரையில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை மேலும் வளர்த்துக் கொண்டே செல்கின்றார். இதனால் இன்று பலரும் வியந்து பார்க்கும் ஒரு நடிகராக உயர்ந்துள்ளார்.
இவருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்ட்டது.மேலும் இவர் நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பாடலாசிரியராகவும் காணப்படுகிறார்.
தற்போது தனுஷ் நடிக்கும் 52வது படமாக உருவாகி வருகிறது இட்லி கடை.. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இட்லி கடை படத்தில் தனுஷின் மாறுபட்ட கேரக்டர்கள் வெளியாகி வைரலாகி உள்ளன. அதில் அவர் நான்கு மாறுபட்ட வேடங்களில் காணப்படுகிறார். இதோ குறித்த போஸ்டர்..
Listen News!