• Dec 26 2024

குலதெய்வம் முன்னாடி ஈஸ்வரி கேட்ட சத்தியம்.! கோபி எடுத்த முடிவு?

Aathira / 11 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி கோபி, இனியா, செழியன் ஆகியோருக்கு எனது கையால் சாப்பாடு ஊட்டி விடுகின்றார். இதன் போது அதனை போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் ஆக வைக்கின்றார் இனியா.

இதை பார்த்த ஜெனி பாக்யாவிடம் காட்ட, பாக்யா கோபிக்கு கொஞ்சம் கூட யோசனை இல்லை, ராதிகா அவமானப்படுறாங்க.. அவங்க வீட்ட காலி பண்ணிட்டு போக போறாங்க.. அதைப்பற்றி யோசிக்காமல் அம்மாவோட சுத்திட்டு இருக்கார் என்று பேசுகிறார்.

இதன் போது ஜெனி தனக்கும் செழியனை நினைத்து பயமாக இருக்கின்றது. அவரும் கோபி போல மாறி விடுவாரோ என்று சொல்ல, கோபியின் அம்மா போல நான் இல்லை. அப்படி எதுவும் நடந்தால் சும்மா விடமாட்டேன் என்று சொல்லுகின்றார்.


இன்னொரு பக்கம் ராதிகா வீட்டில் உள்ள சாமான்களை எல்லாம் அடுக்கி வைத்துக் கொண்டிருக்க அங்கு வந்த கமலா, இப்படியே விடக்கூடாது ஈஸ்வரி மீது கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்ல, ராதிகா இனியா போட்ட ஸ்டேட்டஸ் காட்டுகின்றார். நான் இங்கே சாப்பாடு இல்லாமல் இருக்க அவர் அங்கு சந்தோஷமாக இருக்கின்றார் என்று சொல்கின்றார்.

இதை தொடர்ந்து குலதெய்வம் கோயிலில் கோபி பெயருக்கு அர்ச்சனை செய்த ஈஸ்வரி, அதற்குப் பிறகு நீ எப்போதும் என்னை விட்டுப் போய் விடக்கூடாது.. என் கூடவே இருக்கணும்.. சத்தியம் பண்ணி கொடு என்று எமோஷனலாக பேசுகின்றார்.

இதைக் கேட்ட கோபி எதுவும் செய்ய முடியாத நிலையில் ஈஸ்வரிக்கு நான் உங்களை விட்டு எப்போதும் போக மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement