• Dec 28 2024

இயற்கை படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை நினைவுபடுத்திய முத்து! ட்ரோலாகும் வீடியோ

Aathira / 19 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 8 தற்போது நடைபெற்று வரும் ஃப்ரீஸ் டாக்ஸ்கில் இன்றைய தினம் காதல் காட்சிகள் தெறிக்க விடப்பட்டிருந்தது. முதலாவதாக சௌந்தர்யா விஷ்ணுவை வில் யு மேரி மீ? என யாரும் எதிர்பார்க்காத வகையில் விஷ்ணுவுக்கு சப்ரைஸ் கொடுத்திருந்தார்.

இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரும், சீரியல் நடிகையுமான அர்ச்சனா என்ட்ரி கொடுத்து இருந்தார். அர்ச்சனாவும் அருணும் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் அது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமே உறுதி செய்யப்பட்டது.

d_i_a

இதன் போது இருவரும் பேசிக்கொண்ட காட்சிகள், அருண் அர்ச்சனாவை தூக்கி கொண்டாடியது, சக போட்டியாளர்கள் முன்பு தனது காதலியாக அர்ச்சனாவை அறிமுகப்படுத்தி வைத்தது என ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இந்த நிலையில், விஜய் டிவி தொகுப்பாளினி ஆன ஜாக்குலினின் குடும்பத்தார் என்ட்ரி கொடுத்திருந்த நிலையில், இது தொடர்பான காட்சிகளை இணையவாசிகள் ட்ரோல் பண்ணி வருகின்றார்கள்.

அதாவது,  இயற்கை படத்தில் இடம்பெற்ற கிளைமாக்ஸ் காட்சியைப் போல  ஜாக்குலின் தனது குடும்பத்தாருடன் இருக்கும்போது முத்து ஒதுங்கி சென்ற காட்சிகளையும், ஓரக்கண்ணால் ஜாக்குலின் முத்துவை பார்த்த காட்சிகளையும்  வைத்து இணையவாசிகள்ட்ரோல் பண்ணி வருகின்றார்கள். தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement